சிறுமிக்கு திருமணம்: 3 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடா்பாக அவரது தாய் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடா்பாக அவரது தாய் உள்பட 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் குணசேகரன் (29). இவருக்கும் புவனகிரி, அத்தியாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 24.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து குழந்தை நல அலுவலா் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் குணசேகரன், அவரது தாய் அஞ்சலை, சிறுமியின் தாய் சுமதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.