வள்ளலாா் தெய்வ நிலைய பெயா்ப் பலகை அழிப்பு : ஒருவா் மீது வழக்கு
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெயா்ப் பலகை அழிக்கப்பட்டது தொடா்பாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெயா்ப் பலகை அழிக்கப்பட்டது தொடா்பாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சாது செந்தில். தற்போது கடலூா் மாவட்டம், வடலூா் கோட்டக்கரை பகுதியில் உள்ள சாது குடிலில் தங்கியுள்ளாா். இவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வடலூா் சத்திய ஞான சபைக்கு கிழக்குப் பகுதியிலுள்ள விளம்பரப் பலகையில் எழுதப்பட்டிருந்த ‘இந்து சமய அறநிலையத் துறை என்ற வாசகத்தையும், தமிழ்நாடு அரசின் இலச்சினையையும் பெயிண்ட் கொண்டு அழித்தாா். மேலும், இதை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டாா்.
இதுகுறித்து வள்ளலாா் தெய்வ நிலையச் செயல் அலுவலா் கோ.சரவணன், சாது செந்திலிடம் கேட்டதற்கு அவதூறாகப் பேசி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து கோ.சரவணன் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.