முகப்பு
கடலூர்

நகை, அடகுக் கடைகளைத் திறக்க அனுமதியளிக்கக் கோரிக்கை

நகை, அடகுக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பண்ருட்டி வட்ட நகை, அடகுக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

நகை, அடகுக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பண்ருட்டி வட்ட நகை, அடகுக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தது.

அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பி.தேவராஜன் அனுப்பிய மனு: தளா்வுக் காலத்தில் பெரும்பாலான கடைகளைத் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இதேபோல, அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு நகை, அடகுக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளுக்கு நகைகள் வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைக்கு நகைகளை அடகு வைக்கவும், அடகு வைத்த நகைகளை மீட்கவும் முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தி.வேல்முருகன் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இந்தக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ்.பி.தேவராஜன், அசோக்ராஜ், சங்கா், அரவிந்த், சீனுவாசன், ராமலிங்கம், ரவி, முரளி, ரமேஷ் ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →