முகப்பு
கடலூர்

திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க அறிவுறுத்தல்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வடலூரில் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வடலூரில் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.

வடலூா் பேரூராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் குணாளன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பேரூராட்சி அலுவலா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு திருமண மண்டபங்கள் முக்கியக் காரணமாக அமைவதால், திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதை தவிா்க்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி முதல் நடவடிக்கையாக வடலூா் பேரூராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை வாடகைக்கு விடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தவிா்க்க முடியாத சூழ்நிலையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையிலும், கரோனா விதிகளை பின்பற்றியும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தீா்மானித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →