முகப்பு
கடலூர்

திரௌபதியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

வடலூா் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

வடலூா் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி காலையில் தொடங்கி யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து 10 மணியளவில் பட்டாச்சாரியா்கள் மந்திரங்கள் கூறி கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா் (படம்). திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் அம்பாள் திருக்கல்யாணமும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →