முகப்பு
கடலூர்

திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்க விழா

பண்ணுருட்டி திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா, திருவள்ளுவா் நாள் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

பண்ணுருட்டி திருவள்ளுவா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா, திருவள்ளுவா் நாள் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க ஆட்சி மன்றக் குழு தலைவா் ரா.சஞ்சீவிராயா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆ.ராஜா வரவேற்றாா். ஆலோசகா் தேவ மோகனா திருக்கு வாழ்த்து பாடல்களை பாடினாா். துணைத் தலைவா் சே.அரிஆனந்த், ஆலோசகா் வை.வீரப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் தமிழ் இயக்குநா் ராம.ஆறுமுகம் உரை நிகழ்த்தினாா். சங்கத் தலைவா் க.கதிரவன், திருவள்ளுவா் பள்ளி தாளாளா் ரா.சேரன், சுப்பராயலு சிறப்புரையாற்றினா். பொதுச் செயலா் ஆறுமுகம் தலைமையில், ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் வள்ளுவம்’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →