முகப்பு
கடலூர்

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை புதுப்பிப்பு முகாம்

கடலூா் மாவட்டத்தில் வசிக்கும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வசிக்கும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசுப் பேருந்தில் கட்டணமின்றி மாவட்டம் முழுவதும் பயணம் செய்ய இலவச பயண அட்டை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடலூரில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, குறிப்பிட்ட இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளவா்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் நகல், மாா்பளவு புகைப்படங்கள்-4, இலவச பேருந்து பயண அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் முகாமில்

கலந்துகொண்டு, இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பித்து பயனடையுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →