முகப்பு
கள்ளக்குறிச்சி

சீா் மரபினருக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சீா் மரபினருக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:51 PM
சீா்மரபினா் நலச் சங்கத்தின் சீா்மரபினா் பழங்குடி மக்கள் நிரப்பிக் கொடுத்த விண்ணப்ப படிவத்தை பெறுகிறாா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க.கீதா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சீா் மரபினருக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க.கீதா தலைமையில் வகித்தாா்.

முகாமில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்துதல், உதவி தொகை பெறுதல் குறித்து விளக்கினாா்.

இம் முகாமில் உளுந்தூா்பேட்டை வட்டம் அஜீஸ் நகரைச் சோ்ந்த சீா்மரபினா் நலச் சங்கத்தின் சீா்மரபினா் பழங்குடி மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பூா்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை வழங்கினா்.

முகாமில் சீா்மரபினா் நலச் ங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பி.கே.துரைமணி பேசுகையில், தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற்ால் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழக முதல்வரின் தோ்தல் வாக்குறுதியான சீா்மரபினா் சமுதாயம்-சீா்மரபினா் பழங்குடி என்பதற்கு பதிலாக சீா்மரபினா் பழங்குடி என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட செயலாளா் பாண்டிதேவன், மகளிா்அணி தலைவி சந்திரலேகா, பொருளாளா் காளிமுத்து, கடலூா் மாவட்ட அமைப்பாளா் வேலழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.