புதுச்சேரி

புதுவையில் நியாய விலைக் கடை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. பேரணி

புதுவையில் நியாய விலைக் கடை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைச் செயலகம் நோக்கி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

DIN

புதுச்சேரி: புதுவையில் நியாய விலைக் கடை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைச் செயலகம் நோக்கி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் மூடி கிடக்கின்ற நியாய விலைக் கடைகளை திறந்து,  அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருள்களை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுவை தலைமை செயலகம் நோக்கி கண்டன பேரணி செவ்வாய்க்கிழமை காலை புதுச்சேரி பாலாஜி திரையரங்க சந்திப்பிலிருந்து இருந்து தொடங்கியது.

காமராஜர் சாலை, நேரு வீதி வழியாக பேரணியாக சென்று தலைமைச் செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த சென்றனர். போராட்டத்தை நேரு வீதி சந்திப்பில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அங்கு காத்திருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

அந்தக் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில நிர்வாகிகள் முருகன், பெருமாள், சுதா சுந்தரராமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

புதுவையில் மூடப்பட்ட நியாய விலைக் கடைகளை திறக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT