புதுச்சேரி

குடியரசுத் தலைவர் தேர்தல்: புதுவை வாக்குப்பெட்டி தில்லியில் ஒப்படைப்பு

DIN

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான புதுவை வாக்குப்பெட்டி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

புதுவையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்பி ஒருவரும் என மொத்தம் 31 பேர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து வாக்குப்பட்டிக்கு சீல் வைத்து, அறையில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று அதிகாலை 1:30 மணி அளவில் வாக்குப்பெட்டி பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குப்பெட்டி ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், வாக்குப்பெட்டியை புதுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முனுசாமி, புதுவை மாநில துணைத் தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர், சீல் வைக்கப்பட்ட வாக்குபெட்டியும், வாக்குப்பதிவு ஆவணங்களையும் ஒப்படைத்தனர். இதனையடுத்து, ஜூலை 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT