புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வந்தது.
கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
கடந்தாண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக ரூ.750 பணம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் ஜன. 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசிப் பருப்பு, நெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராகுலின் கேள்விக்கு பாஜகவும் மோடியும் இன்னும் பதில் அளிக்கவில்லை! - காங்கிரஸ் எம்.பி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.