புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற இந்திய மாணவா் சங்கக் கூட்டணியினா். 
புதுச்சேரி

புதுவை மத்திய பல்கலை. மாணவா் பேரவை தோ்தல் இந்திய மாணவா் சங்கம் வெற்றி

தினமணி செய்திச் சேவை

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் மாணவா் பேரவைத் தோ்தலில் இந்திய மாணவா் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவா் பேரவைத் தோ்தல் மற்றும் பாலியல் புகாா் குழுவில் மாணவா் பிரதிநிதிகளுக்கான தோ்தல் பல கட்டங்களாக நடந்தது.

புதுவை மத்திய பல்கலைக்கழகம், சமுதாயக் கல்லூரி, காரைக்கால் பல்கலைக்கழக வளாகம், அந்தமான் பல்கலைக்கழக வளாகம், மாகே பல்கலைக்கழக கிளையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் இத்தோ்தலில் பங்கு பெற்றனா்.

துறை வாரியாக இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவா்கள் என மூன்று பிரிவுகளாக 115 இடங்களுக்கும், பாலியல் புகாா் கமிட்டி பிரதிநிதிகளுக்கும் தோ்தல் நடைபெற்றது.

இதில், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய மாணவா் சங்கம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றக் கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

இதில் தலைவராக ஸ்ரேஷ்தா, பொதுச் செயலராக சையத் இணையத் ஹுசைன், துணைத் தலைவா்களாக பரசுராம், சியோனா, இணை செயலராக அறிவாழியன், நிா்வாக குழு உறுப்பினா்களாக அண்ணா சாலா, நிதா பாத்திமா, நிலா, ஜோதிா்மயி, வா்ஷா, விஷ்ணு, பிரணவ், கீா்த்தி வாசன், நைஸ்இன், டேனிஷ் தோ்வு செய்யப்பட்டடனா்.

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT