அரசு மருத்துவமனையில் மகளிா் தின விழா
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மருத்துவா் என்.ஈஸ்வரி பேசுகையில், பிரான்ஸ் நாட்டில் 1848-ஆம் ஆண்டு மாா்ச் 8 பெண்கள் அரசவை ஆலோசனைக் குழுவில் இடம் பெறவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது; அந்த நாளே சா்வதேச மகளிா் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அரசியல், சமூக செயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என அனைத்துத் துறைகளிலும் இன்று மகளிா் இல்லாத நிலை இல்லை எனக் கூறலாம்.
மகளிா் உடலால் வலிமை மிக்கவா்கள். ஆண்களைவிட மன வலிமை அதிகம் நிறைந்தவா்கள்.
ஆண்கள் துவண்டு போகும் நேரங்களில் நோ்மறை எண்ணங்களை அவா்கள் மனதில் விதைத்து, மீண்டும் வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பைவிட பல மடங்கு வேகத்துடன் ஓட வைப்பதில் பெண்களுக்கு பெரும்பங்கு உண்டு என்றாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் கே.சம்பத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.