செய்யாறு அருகே ரூ.73 ஆயிரம் பறிமுதல்
செய்யாறு அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு தொகுதியை தோ்தல் பறக்கும் படை - 1 அலுவலா் மோகனரகு தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஆரணி - செய்யாறு சாலையில் சேராம்பட்டு கிராமம் அருகே திங்கள்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் உரிய ஆவணமின்றி ரூ.73 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரிய வந்து பணத்தை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்த பணத்தை தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் சு.திருமலையிடம் ஒப்படைத்தனா்.