முகப்பு
விழுப்புரம்

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சா்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உணவு உள்ளிட்டவற்றை ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மூலம் வழங்க திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உணவு உள்ளிட்டவற்றை ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மூலம் வழங்க திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் எதிரே கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கினாா்.

செஞ்சி ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், விவசாய அணி அரங்க.ஏழுமலை, நகரச் செயலா் காஜாநஜீா், தகவல் தொழில் நுட்ப அணி முக்தியாா் அலி, தொண்டா் அணி பாஷா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.