சினிமா

சந்தானத்தின் ‘குலு குலு’ பட வெளியீட்டு உரிமையை வாங்கிய சன்டிவி

‘மேயாத மான்’, ’ஆடை’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

DIN

‘மேயாத மான்’, ’ஆடை’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்னகுமார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' படத்துக்கு இயக்குநர் லோகேஷுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.  தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் 'குலு குலு' படத்தை இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேஷு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படம் ஜூலை 29 திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அதற்குள்ளாக படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை சன்டிவி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT