செய்திகள்

எஸ்.எஸ்.ராஜமெளலியைப் புகழ்ந்து தள்ளும் நடனப் புயல் பிரபுதேவா!

ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளுக்காக மட்டுமே 3 மாதங்களுக்கும் அதிகமான உழைப்பைச் செலவிட்டுள்ளதாகக் கூறும் பிரபுதேவா நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றம் தராது என்கிறார்.

சரோஜினி

பிரபுதேவா, ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘குலேபகாவலி’.  ‘குலேபகாவலி’ படக்குழுவினர், இந்தப் படத்தின் ஆடை அழகியலில் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பதாகக் கூறும் பிரபுதேவா, பாகுபலி 1 & 2 திரைப்படங்களில் அவர்கள் பயன்படுத்திய ஆடை அழகியல் முறையை மிகவும் சிலாகிக்கிறார். இந்தியா சினிமாவின் பெஞ்ச் மார்க் ஆகக் கருதப்படும் பாகுபலியின் ஆடை அழகியல் காட்சிகளில் 15 % காட்சிகள் குலேபகாவலியில் இருந்தாலும் போதும், படம் வென்று விட்டதாக அர்த்தம் என்கிறார் பிரபுதேவா. குலேபகாவலியின் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளுக்காக மட்டுமே 3 மாதங்களுக்கும் அதிகமான உழைப்பைச் செலவிட்டுள்ளதாகக் கூறும் பிரபுதேவா நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றம் தராது என்கிறார்.

சக இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பஞ்சமின்றிப் புகழும் பிரபு தேவா இதற்கு முன்பு அவரோடு ’ ‘ரவுடி ரத்தோர்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் மிக சந்தோஷமாக அந்த வாய்ப்பை ஒப்புக் கொள்ளப்போவதாகவும் பிரபுதேவா தெரிவித்துள்ளார். 

பிரபுதேவா, ஹன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் ’ ‘குலேபகாவலி’ திரைப்படத்தை கல்யாண் இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT