முகப்பு
செய்திகள்

விஜய்யின் தெறி: உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல்முறையாக...

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை இதுவரை எந்தத் தமிழ்த்தொலைக்காட்சிக்கும் தரப்படவில்லை...

Updated On : 27 ஜூன், 2017 at 1:02 PM
பகிர்:

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா, நைனிகா (மீனாவின் மகள்) போன்றோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார். முதல் ஆறு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூல் கண்டு சூப்பர் ஹிட் ஆனது. 

ஆனால் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை இதுவரை எந்தத் தமிழ்த்தொலைக்காட்சிக்கும் தரப்படவில்லை. தயாரிப்பாளர் தாணு மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களிடையே கருத்துவேறுபாடுகள் நிலவியதால் இன்றுவரை அப்படத்தின் உரிமை எந்தத் தமிழ்த் தொலைக்காட்சிக்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தெறி படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அதன் உரிமை சோனி மேக்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற சனிக்கிழமையன்று (ஜூலை 1) இரவு 8 மணிக்கு தெறி-யின் ஹிந்திப் பதிப்பு சோனி மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.