FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

சரியான நடுநிலையாளர் அல்ல என்று மத்தியஸ்தம் செய்துவரும் பாகிஸ்தான் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

Updated On : 27 ஏப்ரல் 2026, 10:39 am IST
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் - ENS
பகிர்:

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் சரியான நடுநிலையாளர் அல்ல என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்பின் விருப்பங்களை நிறைவேற்றவே பாகிஸ்தான் பாடுபடுகிறது, அமெரிக்க விருப்பங்களுக்கு எதிராக பேச மறுக்கிறது என்று பாகிஸ்தான் மீது ஈரான் குற்றம்சாட்டியிருக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான 10 நாள் போா் நிறுத்தம் திங்கள்கிழமையுடன் (ஏப். 27) முடிகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் இருநாடுகள் இடையே 2-ஆவது கட்ட அமைதி பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில்தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணைய பிரநிதி தஷ்டேசன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மத்தியஸ்தம் செய்பவர், நிச்சயமாக ஒரு பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும், ஒரு பக்கம் பேசுபவராக இருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான், எங்களுக்கு நட்பு நாடு, அண்மை நாடும் கூட, ஆனால், நடுநிலையாளராக இருக்க ஏற்புடைய நாடு அல்ல, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு நம்பகத்தன்மை அவசியம். அவர்கள் எப்போதும் டொனால்ட் டிரம்பின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் விருப்பத்துக்கு எதிராக பேசக்கூட மறுக்கிறார்கள. பாகிஸ்தானின் பரிந்துரைகளை முதலில் அமெரிக்கா ஏற்றுக் கொண்டு பிறகு, அதன்படி செயல்பட மறுக்கிறது என்பதைக்கூட வெளி உலகத்துக்குச் சொல் அந்நாடு மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அவ்வப்போது பாகிஸ்தான் சென்று வந்த நிலையில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தாா். எனினும் அவா் சனிக்கிழமை திடீரென ஈரான் திரும்பினாா். அத்துடன் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவாா்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது. இந்த நிலையில்தான், இந்த பதிவு வெளியாகியுள்ளது.

summary

Iran accuses Pakistan of not being a proper mediator

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments