முகப்பு
செய்திகள்

அஜித் பாட்டுக்கு ரசிகர்களுடன் ஆட்டம் போடும் ஓவியா! (விடியோ) 

நடிகர் அஜித் நடித்த படப்பாடல் ஒன்றுக்கு , நடிகை ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சென்னை: நடிகர் அஜித் நடித்த படப்பாடல் ஒன்றுக்கு , நடிகை ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பெரும் புகழடைந்தவர் நடிகை ஓவியா. அந்நிகழ்ச்சியில் தனது பாஸிட்டிவ் மற்றும் தனித்துவமான நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

விரைவில் நடிகர் ராகவேந்திரா லாரன்சுடன் திரைப்படம் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஓவியா தனது ரசிகர்களுடன், அஜித் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகப் பரவி  வருகிறது.

Advertisement

அஜித் மற்றும் ஷாலினி நடிப்பில் உருவான, இயக்குநர் சரணின் 'அமரக்களம்' படத்தில் இடம்பெற்ற 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... என் உள்நெஞ்சு சொல்கின்றதே' என்ற பாடலுக்குத்தான் ஓவியா தன் ரசிகர்களோடு நடனம் ஆடியிருக்கிறார்.

இந்த விடியோவானது தற்பொழுது ஓவியா ரசிகர்கள் மற்றும் அஜித்  ரசிகர்களால் அதிகமாகப் பரவி வருகிறது.

விடியோ: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments