செய்திகள்

லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகத் தயாராகும் அல்லு அர்ஜூன்!

முன்னதாக இயக்குனர் லிங்குசாமி, சூர்யா, சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான ‘ அஞ்சான்’ படத்தை தெலுங்கில், ‘சூர்யா’ஸ் சிக்கந்தர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு டோலிவுட்டில் தனது புது வருகையை

சரோஜினி

இன்னும் பெயரிடப்படாத இருமொழிப் படமொன்றின் (பைலிங்குவல்) மூலமாக தெலுங்கு ஹாட் ஸ்டார் அல்லு அர்ஜூன் தமிழ் பேசவிருக்கிறாராம். அதாவது நேரடித் தமிழ்ப் படமொன்றின் மூலமாகத் தனக்கிருக்கும் தமிழ் ரசிகர்களை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் அக்கட பூமியின் அதிரடி ஸ்டார் அல்லு அர்ஜூன். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனை இயக்கவிருப்பது இயக்குனர் லிங்குசாமி!

முன்னதாக இயக்குனர் லிங்குசாமி, சூர்யா, சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான ‘ அஞ்சான்’ படத்தை தெலுங்கில், ‘சூர்யா’ஸ் சிக்கந்தர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு டோலிவுட்டில் தனது புது வருகையைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதைத் தொடர்ந்து, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோக்கள் இருவரை மையமாக வைத்து லிங்குசாமி இயக்கத்தில் இருமொழிப் படமொன்று வெளிவரவிருப்பதாகவும், அதில் ஒரு நாயகன் அல்லு அர்ஜூன் எனவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இன்னமும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் லிங்குசாமி தரப்பிலிருந்தோ அல்லது அல்லு அர்ஜூன் தரப்பிலிருந்தோ வெளிவரவில்லை. கூடிய விரைவில் வெளிவரும் என்கிறது டோலிவுட் செய்திகள்.

தற்போது, வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படமான, ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ (என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா) படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால் அதன் படப்பிடிப்புகளில் அல்லு அர்ஜூன் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT