செய்திகள்

மீம்ஸ் கிரியேட்டர்களை பீன்ஸ் கிரியேட்டர்களாக்கி கலாய்க்கும் கேப்டன்?!

விஜயகாந்த் என்றைக்கு தேமுதிக வைத் தொடங்கினாரோ அன்று முதல் அவர் தமிழக மீம்ஸ் கிரியேட்டர்கள் அத்தனை பேரின் செல்லப் பிள்ளையாகி விட்டார் என்றால் அது மிகையில்லை.

சரோஜினி

வார இதழொன்றில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தற்கால அரசியல் நிலைமைகள், அதில் தனது நிலைப்பாடு, தேமுதிகவின் அரசியல் எதிர்காலம், தனது மகன்களின் வளர்ச்சி, கமல், ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் தனது கருத்துகள் என்பது குறித்தெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே வந்தவர் அடுத்ததாக தன்னைக் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் மீம்ஸ்கள் குறித்த கேள்வியொன்றுக்கு அளித்த பதில் சரியான அகடவிகடம்.

விஜயகாந்த் என்றைக்கு தேமுதிக வைத் தொடங்கினாரோ அன்று முதல் அவர் தமிழக மீம்ஸ் கிரியேட்டர்கள் அத்தனை பேரின் செல்லப் பிள்ளையாகி விட்டார் என்றால் அது மிகையில்லை. இணையத்தில் எங்கெங்கு காணினும் அவரைக் குறித்து வெளிவரும் நகைச்சுவையான மீம்ஸ்களுக்கு ஒருபோதும் பஞ்சமே இருப்பதில்லை. ஆனால் அன்பார்ந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இதுவரை தெரிந்திராத விஷயம் ஒன்று உண்டென்றால் அது அவர்கள் இத்தனை பாடுபட்டு, மெனக்கெட்டு உருவாக்கி ஹிட்டுக்கு மேல் ஹிட் அடிக்க வைத்துக் கொண்டிருக்கும் கேப்டன் மீம்ஸ்கள், சாட்ஷாத் அந்த கேப்டனுக்கே புரிவதில்லை என்பது தான். 

இணையத்தில் வெளிவரும் மீம்ஸ்களை, தான்... பல நாட்களாக ‘பீன்ஸ்’ என்று தான் புரிந்து கொண்டிருந்ததாக பச்சைக் குழந்தையாகப் பதில் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்! அடப்போங்கையா மீம்ஸ் கிரியேட்டர்ஸ்! இப்படி ஒரு ஒன்றும் தெரியாத அப்பாவியையா மீம்ஸ்களில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?! என்ன ஒரு அநியாயம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT