முகப்பு
செய்திகள்

விஜய் 62 - கேமராமேன் இவர்தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் கேமராமேனாக கிரிஷ் கங்காதரன்

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் கேமராமேனாக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மலையாளத் திரையுலகில் கலக்கிக் கொண்டிருப்பவர். களி, அங்கமாலி டயரீஸ் மற்றும் சமீபத்திய படமான சோலோ ஆகியவை இவர் கேமாரவின் கைவண்ணமே. 

இது குறித்து கிரீஷ் கூறுகையில், ‘இந்தப் படத்தில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அது வரை காத்திருக்க வேண்டுமே என்று இருக்கிறது’ என்றார்.

இப்படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளில் முடிக்கும் நிலையில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் டைட்டில் மற்றும் கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.  துப்பாக்கி, கத்தி ஆகிய மிகப் பெரிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் இணைகிறார்கள். இப்படத்துக்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். 

விஜய் 62  படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →