மாணவர்களுடன் பைக்கில் ஊர்வலம் போகும் விஜய்: இணையத்தில் வைரலான புகைப்படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்காக மாணவர்களுடன் விஜய் பைக்கில் ஊர்வலம் போகும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்திற்காக மாணவர்களுடன் விஜய் பைக்கில் ஊர்வலம் போகும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
விஜய் இப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில், இன்னும் பெயர் சூட்டப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக ராதாரவி நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஸ்ட்ரைக் காரணமாக தடைப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, தற்பொழுது சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இரவு நேரத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது.
Advertisement
அப்பொழுது கல்லூரி மாணவர்களுடன் பைக் ஒன்றில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சியை படமாக்கப்பட்டது. அந்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட, அது தற்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.