செய்திகள்

பாபுஜி கமலை வாழ்த்தி மகிழும் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்!

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து விஐபிக்கள் வாழ்த்துக்களை குவித்துக் கொண்டிருக்கையில் அவரது மகள் ஸ்ருதி ஹாசன்

சினேகா

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து விஐபிக்கள் வாழ்த்துக்களை குவித்துக் கொண்டிருக்கையில் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் தங்களது தந்தை அரசியலில் நுழைவதை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

அன்புள்ள அப்பாவிற்கு அரசியல் பாதையில் எனும் நீண்ட பயணத்தின் முதல் அடி எடுத்து வைத்துள்ளீர்கள். உங்களுக்கு விருப்பமான மகாத்மா காந்தியின் மேற்கோளுக்கு ஏற்ப, நீங்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், அரசியல் சீர்திருத்தத்திற்காகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். உங்களுடைய உறுதியும் விடாமுயற்சியும், சத்தியமும், நேர்மையும் நம் குடும்பத்தில் நேரில் கண்டிருக்கிறேன். இப்போது நம் குடும்பமான தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்து கொள்வார்கள்’ என்று ஸ்ருதி ஹாசன் கூறினார்.

இளைய மகள் அக்ஷரா ஹாசன், 'மக்கள் நீதி மையம் குறித்து அறிவித்துள்ளார் என் அருமை பாபுஜி. இது ஒரு மகத்தான தருணம், தனி மனித முன்னேற்றம் என்பது அவரவரின் தனிப்பட்ட பயணம் ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் என்பது மக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே ஏற்படும் என்பதை எங்கள் பாபுஜி கற்றுக் கொடுத்திருக்கிறார். லவ் யூ பாபுஜி என்று கூறியிருக்கிறார்.

மகள் தந்தைக்காற்றும் உதவி இதுவுமன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை

தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு

SCROLL FOR NEXT