முகப்பு
செய்திகள்

அரசியலில் ரஜினி: ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து!

திரைத்துறையில் உள்ளவர்களும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிக்கு...

Updated On : 4 ஜனவரி, 2018 at 5:50 PM
பகிர்:

அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிக்கு என் வாழ்த்துகள் என ரஹ்மான் கூறியுள்ளார். 

ஜனவரி 12 அன்று சென்னையில் நேற்று இன்று நாளை என்கிற இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

25 ஆண்டு காலம் என்னை ஆதரித்த தமிழ் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisement

திரைத்துறையில் உள்ளவர்களும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிக்கு என் வாழ்த்துகள். ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து யோசித்து என் நிலைப்பாட்டைப் பிறகு அறிவிக்கிறேன். கலாசார நகராக சென்னை இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். மேலும், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.