செய்திகள்

‘அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு!

சன்னிக்கு இப்படிப்பட்ட அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லை. இன்றைய தேதிக்கு இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் வரலாறு காணாத டிராஃபிக் ஜாம் ஏற்படுத்தக் கூடிய நபர்களில் சன்னியும் ஒருவர்.

சரோஜினி

சன்னி லியோன் தமிழர்களுக்கு எப்படி பரிச்சயமானார்? என்ற கேள்வி அனாவசியமானது. சன்னி தனது அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் போர்ன் வீடியோக்கள் மூலமாக இன்று அகில உலகப் பிரபலம். இந்தியாவிற்கு அவரது வருகை பாலிவுட் திரைப்படங்கள் வாயிலாக அறிமுகமானது. தமிழில் ‘வடகறி’ என்றொரு திரைப்படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார். 

சன்னிக்கு இப்படிப்பட்ட அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லை. இன்றைய தேதிக்கு இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் வரலாறு காணாத டிராஃபிக் ஜாம் ஏற்படுத்தக் கூடிய நபர்களில் சன்னியும் ஒருவர். உதாரணம் அவர் கடந்தாண்டில் கொச்சிக்கு வருகை தந்த வீடியோவை யூடியூபில் தேடிப் பாருங்கள். சேட்டன்கள் இந்த கனடா பிரஜையான சேச்சியைக் காண எப்படித் தவித்திருக்கிறார்கள் என்று புரியும். அந்தக்கதையை விடுங்கள். ஆனால், அப்படிப்பட்ட இடத்தை அடைய இந்தப் பெண் எதையெல்லாம் தாண்டி வந்திருக்கிறார் என்று அவரது ஆதர்ஸ ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே! அதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது  ‘தி அன் டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ வெப் சீரிஸ். படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். 

கனடாவுக்கு இடம்பெயர்ந்த இந்தியத் தம்பதியின் மகளாகப் பிறந்த சன்னிக்கு பெற்றோர் வைத்த பெயர் கரென்ஜித் கெளர். பள்ளியில் படிக்கும் போதே குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் அடல்ட் படங்களில் நடிக்க முன் வருகிறார் இளம்பெண்ணான கரென்ஜித். திரைக்காக ஏன் பெயர் மாற்றம் என்றால்? கரென்ஜித் என்ற பெயரை வைத்துக் கொண்டு தன்னால் அடல்ட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற முடியாது என நினைத்ததால் சன்னி லியோன் ஆனார். போர்னோ படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் அவரது வருமானம் பெருகத் தொடங்கிய நாட்களில் பெற்றொர் தமது மகளுக்கு லாட்டரி அடித்து விட்டதா? ஏது இத்தனை பணம் என யோசிக்கத் தொடங்கினர். அந்த நொடியில் தான்... கரென்ஜித்... தனது வேலையைப் பற்றி தன் பெற்றோரிடம் சொல்லத் துணிகிறார். பெற்றோர் இருவரையும் அமர வைத்து தனது வேலையைப் பற்றி விளக்குகிறார். ட்ரெய்லரில் சன்னிக்கும், அவரது சகோதரருக்குமான பாசப் பிணைப்பைப் பற்றியும் காட்சிகள் உள்ளன. போர்னோ படங்களில் நடிப்பதால் இந்தியாவில் சன்னியை எந்த அளவுக்கு மக்கள் விரும்புகிறார்களோ அதே அளவுக்கு அவர் மீது அசூயையும் காண்பிக்கப்படுகிறது. அப்படிக் கருதுகிறவர்கள் இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரைப் பார்த்தால் ஒருவேளை மனம் மாறலாம்.

ஒரு நடிகை போர்னோ படங்களில் நடிக்கும் அளவுக்கு எப்போது துணிகிறார் என்றால்? என்ற கேள்விக்கான பதில் இந்த வெப் சீரிஸில் உண்டு.

அதோடு கூட சன்னியும் கூட ‘தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்’  பெண் தான். அவரை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது இந்த திரைப்படம்.

2 நிமிடங்கள் 18 நொடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லரை கண்ணிமைக்காமல் ஒரே வீச்சில் பார்த்து முடித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்ததொரு சன்னி ரசிகராகவே இருக்கக்கூடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT