செய்திகள்

ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!

சரோஜினி

தெலுங்கு மெகா சீரியல் உலகில் பிரபலமானவர்களாக வலம் வரும் இரு இளம் நடிகைகள் நேற்று திடீரென கார் விபத்தில் மரணித்த செய்தி டோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மரணமடைந்த அனுஷா ரெட்டிக்கு வயது 21, பார்கவிக்கு வயது 20. இருவரும் அனந்தகிரி வனப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த தெலுங்கு மெகா சீரியல் ஒன்றின் படப்பிடிப்புக்காக திங்களன்று சென்றிருந்தனர். அங்கு படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி ஹைதராபாத் திரும்புவதற்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் விகாராபாத் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விரைந்து வந்து கொண்டிருந்த டிரக்கில் இருந்து விலக எண்ணி காரைப் படுவேகத்தில் திருப்ப அப்பாரெட்டிகுடா அருகே மரத்தில் மோதி கார் அப்பளமாக நொறுங்கியதுடன் உள்ளிருந்தவர்களும் படுகாயமுற்றனர். இதில் பார்கவி ஸ்பாட்டிலேயே மரணமடைய, உடன் பயணித்த அனுஷா ரெட்டி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி இறந்தார். உடன் பயணித்த ஓட்டுநர் உட்பட ஆண்கள் இருவருமே பலத்த காயங்களுடன் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் பார்கவி தெலுங்கில் பாப்புலராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘முத்யால முக்கு’ எனும் நெடுந்தொடரின் நாயகி. அனுஷா ரெட்டி தெலுங்கு, தமிழ் என இரு மொழி மெகாசீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர். தமிழில் ராஜா ராணி சீரியலில் கார்த்திக்கின் முன்னாள் காதலியாக நடித்து வந்தார். பிறகு அந்தத் தொடரில் இருந்து விலகி மற்றொரு தமிழ் நெடுந்தொடரில் நாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நம்பிக்கை தரும் இளம் நடிகைகளாக இருந்த வந்த இருவரையும் ஒரு சேர இழந்ததில் சீரியல் உலகம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT