செய்திகள்

இரண்டு வாழைப்பழங்களின்  விலை ரூ.442.50!: ட்விட்டரில் நியாயம் கேட்ட நடிகர் 

பஞ்சாபின் சண்டிகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்  ஒன்றில் இரண்டு வாழைப்பழங்கள் ரூ.442.50 க்கு விற்கப்பட்டது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். 

DIN

சண்டிகர்: பஞ்சாபின் சண்டிகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்  ஒன்றில் இரண்டு வாழைப்பழங்கள் ரூ.442.50 க்கு விற்கப்பட்டது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். 

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடித்தவர் ராகுல் போஸ். ஒரு நடிகராக மட்டும் அல்லாது இயக்குநர், சமூக ஆர்வலர் என்று இவர் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்நிலையில் பஞ்சாபின் சண்டிகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்  ஒன்றில் இரண்டு வாழைப்பழங்கள் ரூ.442.50 க்கு விற்கப்பட்டது குறித்து ராகுல் போஸ் விடியோ பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் விடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் சண்டிகரில் ஒரு ஜே.டபிள்யூ மாரியட் என்கிற ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கிறேன். ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். அதற்கான ரசீதைப் பாருங்கள் என்று வீடியோவில் ரசீதைக் காட்டுகிறார். அதில் இரண்டு பழங்களுக்கான விலை, ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ. 442.50 என்று விலை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றுக்கு நான் தகுதியானவனா தெரியவில்லை என்றும் என்று அவர் கூறி உள்ளார்.

ராகுல் போஸின் இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. தற்போது இதுகுறித்து விசாரிக்க வரிவிதிப்பு ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

இறுதிச் சுற்றில் வலேன்டின்! ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT