செய்திகள்

பிக் பாஸ் சீசன் - 3 டைட்டில் வின்னர் இவர்தானா?

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.  

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3, 105 நாட்களுடன் இன்றுடன் முடிவடைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தற்போது 100 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் இருக்கின்றனர். 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் தான் பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை முறையே லாஸ்லியா மற்றும் சாண்டி பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

ஆனால், வாக்குகளின் அடிப்படையில் லாஸ்லியா தான் அதிக வாக்குகளைப் பெற்றதாகவும், அதே நேரத்தில் தகுதியான நபர் என்ற அடிப்படையில் முகேனுக்கு தான் டைட்டில் வின்னர் பட்டம் வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் கடைசி எலிமினேஷனில் ஷெரின் அல்லது லாஸ்லியா தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தர்ஷன் வெளியேற்றப்பட்டது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியானதாக இருந்தது. பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் இதற்கு கண்டனமும் தெரிவித்தனர். 

இதனால் டைட்டில் வின்னர்  தகுதியான நபருக்கு சென்றடைய வேண்டும் என்பதில் விஜய் டிவி குழுமத்தினர் கவனமாக இருக்கிறார்களாம்.

இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் அறிவிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT