முகப்பு
செய்திகள்

முதன்முறையாக ரஹ்மான் இசையில் விஜய்: பிகிலின் 'வெறித்தனம்' பாடல் வெளியீடு

முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள பிகில் படத்தின்  'வெறித்தனம்' பாடல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:

சென்னை: முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள பிகில் படத்தின்  'வெறித்தனம்' பாடல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் இளையராஜா துவங்கி பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் இதுவரை ஒரு பாடல்கூட பாடியது இல்லை.

இந்நிலையில் தீபாவளிக்கு  வெளியாகவுள்ள 'பிகில்' படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித் தது. இது அவரது ரசிகர்களிடம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

முன்னதாக இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிங்கப் பெண்ணே’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேசமயம் 'வெறித்தனம்'  பாடலின் புரோமோ வீடியோ படக்குழுவால் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள பிகில் படத்தின்  'வெறித்தனம்' பாடல் விடியோ யூ டியூபில் ஞாயிறு மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

“நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம்" எனத் துவங்கும் இப்பாடல் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.