முகப்பு
செய்திகள்

'பீஸ்ட்' படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைகிறாரா தனுஷ் ?

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் தனுஷ் இணையவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:


நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் தனுஷ் இணையவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. 

இந்த நிலையில் நடிகர் தனுஷும் இந்தப் படத்தில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதாவது தனுஷ் இந்தப் படத்தில் பாடல் எழுதி, பாடுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் குறித்து எந்த தகவல் என்றாலும் அதனை உடனடியாக சமூக வலைதளங்களில் அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தனுஷ் 'பீஸ்ட்' படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டால், அதனை சன் டிவி நிறுவனம் உடனடியாக அறிவித்திருக்கும். அதனால் அந்த தகவலில் உண்மையிருக்காது என்றே கூறப்படுகிறது. 

மேலும், நெல்சன் திலீப்குமார், இயக்கியிருந்த 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய இரு படங்களிலும் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியிருந்தார். இதில் 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம். இருப்பினும் 'பீஸ்ட்' படத்தில் நெல்சனுடன் இருக்கும் நட்பின் காரணமாக அவர் பாடல் எழுதுவார் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.