முகப்பு
செய்திகள்

தோனி - நடிகர் விஜய் சந்திப்பு : புகைப்படத்தால் பிரபல இயக்குநர் வருத்தம்

தோனி மற்றும் விஜய்யுடன் நெல்சன் திலீப்குமார் இருக்கும் புகைப்பட பதிவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன் 'தன்னை அழைக்கவில்லை' என வருத்தம் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தோனி மற்றும் விஜய்யுடன் நெல்சன் திலீப்குமார் இருக்கும் புகைப்பட பதிவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன் 'தன்னை அழைக்கவில்லை' என வருத்தம் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தனியார் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவில் கிரிக்கெட் வீரர் தோனி ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது நடிகர் விஜய் அங்கு படப்பிடிப்பில் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

பின்னர் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் மற்றும் தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தைப் பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன், ''ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். வயிற்றின் வெப்பநிலை 274 டிகிரியாக இருக்கிறது. இந்த புகைப்படத்தை முழுமையான தரத்துடன் எனக்கு அனுப்புங்கள். நான் இந்தப் படத்தில் இருப்பது போல எடிட் செய்து மாற்றிக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

சும்மா இருப்பார்களா ரசிகர்கள், விஜய் மற்றும் தோனிக்கு நடுவே, விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இருப்பது போல எடிட் செய்து அவருக்கு பரிசளித்து வருகின்றனர். 

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், 'எனக்கு வேற வழி தெர்ல ஆத்தா' என 'சின்ன கவுண்டர்' படத்தில் நடிகர் விஜயகாந்த், நடிகை மனோராமாவிடம் பேசும் காட்சியை பகிர்ந்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.