முகப்பு
செய்திகள்

மீண்டும் தெலுங்கு படத்துக்கு இசையமைக்கும் அனிருத் : வெளியான தகவல்

ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அனிருத் தற்போது நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்', கமல்ஹாசனின் 'விக்ரம்', சிவகார்த்திகேயனின் 'டான்', விஜய் சேதுபதியின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இவர் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள 'டாக்டர்' படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. 

இந்த நிலையில் இவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் கொரட்டலா சிவா இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராம் சரணுடன் இணைந்து ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ளார். 

தெலுங்கில் அனிருத் ஏற்கனவே பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்த 'அஞ்யாதவாசி', நானி கதாநாயகனாக நடித்த 'கேங் லீடர்', 'ஜெர்ஸி' படங்களுக்கு இசையமைத்தார். இதில் 'கேங் லீடர்' மற்றும் 'ஜெர்ஸி' படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

'மாஸ்டர்' படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதன் காரணமாக ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்குப் பிறகு தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →