செய்திகள்

நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் யுவன் சந்திப்பு

DIN

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வேலை என்ற படத்தில்காலத்துக்கேத்த ஒரு கானா என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். பின்னர் விஜய் நடித்திருந்த புதிய கீதை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். புதிய கீதை படத்தின் பாடல்கள் வெற்றிபெற்றாலும், படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. 

இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் அந்த கண்ணப் பார்த்தாக்கா என்ற பாடலை யுவன் பாடியிருந்தார். ஆனால் விஜய் படத்துக்கு யுவன் எப்பொழுது இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. 

இந்த நிலையில் யுவன், நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது வெறும் நட்பு ரீதியிலான சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் விரைவில் தெரிய வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 4 மணி: பாஜக 5, காங்கிரஸ் 4 வெற்றி!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

ஹெச்.டி.குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

சிறையில் இருந்தவாறு வென்ற சுயேச்சை வேட்பாளர்!

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை

SCROLL FOR NEXT