முகப்பு
செய்திகள்

''வெட்கப்பட்டேன்'' : சூர்யா பகிர்ந்த சுவாரசியத் தகவல்

எதற்கும் துணிந்தவன் பாடல் அனுபவம் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இருந்து டி.இமான் இசையில் வாடா தம்பி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து உள்ளம் உருகுதய்யா என்ற பாடல் வெளியானது. யுகபாரதி எழுதிய இந்தப் பாடலை பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாசன், பிருந்தா மாணிக்கவாசன் உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். 

இந்த பாடலில் நடிகர் சூர்யா மீசையில்லாமல் தோன்றியிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப் பாடலை பகிர்ந்த சூர்யா, நீண்ட நாட்களுக்கு பிறகு  மிகவும் வெட்கப்பட்ட பாடல்.. இயக்குநரே... என்று தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →