முகப்பு
செய்திகள்

அமராவதியில் தன்னுடன் நடித்தவரின் மகனுடன் வலிமையில் இணையும் அஜித்

நடிகர் அஜித் அறிமுகமான அமராவதியில் அவருடன் நடித்தவரின் மகன் வலிமை படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், மேக்கிங் விடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் ராஜ் அய்யப்பா என்பவர் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்துள்ளாராம். இவர் நடிகர் அஜித்தின் முதல் படமான அமராவதியில் நடித்த பானு பிரகாஷ் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | விஜய் பட இயக்குநர் மரணம்

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →