செய்திகள்

நடிகர் விஜய்யின் அடுத்தப் பட இயக்குநர் இவரா? - பிரபல பாடகர் பகிர்ந்த தகவலால் பரபரப்பு

நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கவிருப்பதாக பாடகர் கிரிஷ் தகவல் பகிர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கவிருப்பதாக பாடகர் கிரிஷ் தகவல் பகிர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

பீஸ்ட் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. அருகிலேயே கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. அப்போது விஜய்யும், கார்த்தியும் சந்தித்து பேசினர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. 

பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. விஜய்யின் அடுத்தப் பட இயக்குநர் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்பட்டாலும், அவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் பாடகரும் நடிகருமான கிரிஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் இயக்குநர் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

அந்தப் பதிவில், எனக்குப் பிடித்த இயக்குநர் வம்சிக்கு பிறந்த நாள் வாழத்துகள். நடிகர் விஜய்யுடன் நீங்கள் இணையும் படத்துக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்தப் பதிவை நீக்கி விட்டார். விஜய்யின் தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அந்தப் பதிவை நீக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதும் ரசிகர்கள் அந்தப் பதிவை நகலெடுத்து பகிர்ந்து வருகின்றனர். 

இயக்குநர் வம்சி கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய தோழா படம், இருமொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் மகேஷ் பாபு நடித்து கடந்த 2019 ஆண்டு மஹார்ஷி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT