செய்திகள்

மருத்துவமனையில் நடிகை யாஷிகாவின் நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது? - தங்கை விளக்கம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலை குறித்து அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகை யாஷிகாவின் தற்போதைய நிலை குறித்து அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடிகை யாஷிகா ஆனந்த் வந்த கார் மாமமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த வள்ளிசெட்டி பவனி என்ற பெண் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நடிகை யாஷிகா ஆனந்த்திற்கு விபத்தில் கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் யாஷிகாவின் தங்கை ஆன்ஷீன் ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எல்லோருக்கும் வணக்கம். உங்களது வேண்டுதல்களுக்கு நன்றி. யாஷிகாவிற்கு ஒரு அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது. அவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அவரது உடலில் சில இடங்களில் ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியிருக்கின்றன. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனது சகோதரிக்காக கடவுளிடம் தொடர்ந்து வேண்டிக்கொள்ளுங்கள், நன்றி'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT