செய்திகள்

பிரம்மாண்டமாக தயாராகும் இயக்குநர் ஷங்கர் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா ?

இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

DIN

இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்பொழுது துவங்கும் என எந்த தகவல்களும் இல்லை. இதற்கிடையில் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம் சரணை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் மும்முரத்தில் இருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். 

இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தமன் இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. 

இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று (சனிக்கிழமை) தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி கதாநாயகி கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இயக்குநர் ஷங்கருடன் கியாரா அத்வானி உரையாடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கியாரா அத்வானி, எம்,எஸ்.தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர். மேலும் ராம் சரணுடன் இணைந்து ஏற்கனவே 'வினய விதேய ராமா' என்ற படத்தில் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் தொழிலாளி கைது

திட்டப் பணிகளில் குறைபாடு: திருச்சி மாநகராட்சியில் 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி தொகை பிடித்தம்

இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT