செய்திகள்

உலகளவில் அதிகப் பார்வையாளர்களைக் கவர்ந்த ஜகமே தந்திரம்: புள்ளிவிவரங்களை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்

DIN

கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் படம் உலகளவில் அதிகப் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். 

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியானது. தமிழில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் வழியாக 190 நாடுகளில் ஒளிபரப்பானது. 

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் அதிகப் பார்வையாளர்களை ஜகமே தந்திரம் படம் ஈர்த்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவுக்கு வெளியே 12 நாடுகளில் நெட்பிளிக்ஸ் டாப் 10 பட்டியலில் ஜகமே தந்திரம் படம் இடம்பிடித்துள்ளது, இந்தியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நெட்பிளிக்ஸில் முதலிடம் பிடித்துள்ளது, முதல் வாரத்தில் படத்தைப் பார்த்த பாதி பேர் இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் தாம் என படத்தின் முதல் வாரப் பார்வையாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீங்கள் நலமா? விரல் நகத்தைப் பாருங்கள் அது சொல்லும்!!

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன்?

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT