செய்திகள்

சமீபத்தில் திருமணமான சின்னத்திரை ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிம்பு: வெளியான விடியோ

சமீபத்தில் திருமணமான சின்னத்திரை பிரபலங்களுக்கு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

ஜி தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற தொடரில் நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன்  பாண்டியன் ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து கூறினர். 

இந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்களுக்கு விடியோ அழைப்பு மூலம் பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் சிம்பு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT