முகப்பு
செய்திகள்

கரோனா பாதிப்பால் பிக்பாஸில் இருந்து வெளியேறினாரா நமிதா ? பரவும் தகவல் - நடந்தது என்ன ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா வெளியேறிய காரணத்தை அவரது தோழி பகிர்ந்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா வெளியேறிய காரணத்தை அவரது தோழி பகிர்ந்துள்ளார். 

பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நமிதா கடந்த வார நிகழ்ச்சியில் திருநங்கைகள் படும் கஷ்டங்களை மிக உணர்ச்சிகரமாக பேசினார். 

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விஜய் டிவி பகிர்ந்த ப்ரமோவில் நமிதா இல்லை. அவர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தது. ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நமிதா வெளியேற்றப்பட்டதாகவும், நமிதாவுக்கு கரோனா பரவல் காரணமாக வெளியேறிவிட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் உலா வந்தன. 

இந்த நிலையில் நமிதா வெறியேறியது தொடர்பாக பேசிய அவரது தோழி, நமிதாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாமாக முன்வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நமிதா பற்றி பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.