செய்திகள்

திடீரென தனக்கு குழந்தை பிறத்திருப்பதாக விடியோ பகிர்ந்த ஸ்ரேயா : ஆச்சரியத்தில் ரசிகர்கள்

நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து ரஜினிகாந்த்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் , தனுஷுடன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள நராகசுரன் படம் கடந்த சில வருடங்களாக பொருளாதரா சிக்கல் காரணமாக திரைக்குவராமல் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை முதன்முறையாக அறிவித்துள்ளார். 

கர்ப்பமாக இருந்ததை அவர் அறிவிக்காததால் இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ''எங்களுக்கு  2020 கரோனா ஊரடங்கு மகிழ்ச்சிகரமான காலகட்டமாக அமைந்தது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

SCROLL FOR NEXT