ரசிகர்களே ரெடியா? நாளை வெளியாகிறது 'மணி ஹெய்ஸ்ட்' 
செய்திகள்

ரசிகர்களே ரெடியா? நாளை வெளியாகிறது 'மணி ஹெய்ஸ்ட்'

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பெரும் வரவேற்பு பெற்ற மணிஹெய்ஸ்ட் தொடர் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

DIN

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பெரும் வரவேற்பு பெற்ற மணிஹெய்ஸ்ட் தொடர் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வங்கி திருட்டை அடிப்படையாகக் கொண்டு ‘மணி ஹைஸ்ட்’ வெப்சீரிஸின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின. இதன் கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகளவில் மிகவும் பிரபலமாகின.

கரோனா பொதுமுடக்கம் அமலானபோது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப்சீரிஸுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. இந்நிலையில் இதன் இறுதி பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மணி ஹெய்ஸ்டின் மணி ஹைஸ்ட் 5-வது பாகம் தலா 5 அத்தியாயங்கள் என இரண்டு பகுதிகளாக வெளியாகிறது. முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும், 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதியும் வெளியாகின்றன.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள இந்தத் தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT