செய்திகள்

நடிகர் விஜய்யின் தளபதி 66 பட இயக்குநருக்கு பதிலளித்த பீஸ்ட் இயக்குநர் நெல்சன்: ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி 66 படத்துக்காக இயக்குநர் வம்சிக்கு, பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் தனது சுட்டுரைப் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

தளபதி 66 படத்துக்காக இயக்குநர் வம்சிக்கு, பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் தனது சுட்டுரைப் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இதனையடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்த நிலையில், பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் தனது சுட்டுரைப் பக்கம் மூலம், தளபதி 66 பட இயக்குநர் வம்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வம்சி, நன்றி நெல்சன், உங்கள் பீஸ்ட் படத்துக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். அதற்கு நெல்சனும் நன்றி சொன்னார். 

விஜய்யின் அடுத்தப் பட இயக்குநர்கள் சஜகமாக பேசிக்கொள்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தளபதி 66 படத்துக்கு தமன் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரயேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

SCROLL FOR NEXT