விஜய்யின் 'வாரிசு' பற்றி வெளியான தகவல் - ரசிகர்கள் நிம்மதி
வாரிசு படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வாரிசு படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களைத் தவிர்த்து பெரும்பாலான தெலுங்கு படங்கள் பெரும் நட்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் (ஆகஸ்ட் 1) தெலுங்கு திரைப்பட தயாரிப்புகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனராம்.
குறிப்பாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 10 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பார்வையில் திரைப்படங்கள் 3 வாரங்களில் ஓடிடியில் வெளியாவதே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு மக்கள் வராததற்கு காரணம் என கருதுகின்றனர்.
Advertisement
இதையும் படிக்க | ''உண்மை வெல்லும், ஜெய்பீம்'' - என்ஜாயி எஞ்சாமி சர்ச்சைக்கு அறிவு விளக்கம் - பதில் சொல்வாரா சந்தோஷ் நாராயணன்?
இந்த நிலையில் விஜய்யின் வாரிசு, தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரித்துவருவதால் இந்தப் படங்களின் தயாரிப்பு பணிகளும் நிறுத்திவைக்கப்படும் என்று கூறப்பட்டது.
வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. வாரிசு தெலுங்கு மற்றும் தமிழ் என படமாக்கப்படாமல், தமிழில் மட்டுமே உருவாகிறதாம். இதனால் வாரிசு படத்துக்கு சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.