செய்திகள்

‘மாவீரன்’ இசை உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் இசை உரிமத்தை பிரபல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

DIN

டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் புதிய படத்தில் ஒப்பந்தமானார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்  நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார். 

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்தியேன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் பாடல்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT