செய்திகள்

ஷாருக்கானின் பதான்: ‘அழையா மழை’ தமிழ் பாடல் வெளியீடு

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் படத்திலிருந்து ‘அழையா மழை’ என்ற தமிழ் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் படத்திலிருந்து ‘அழையா மழை’ என்ற தமிழ் பாடல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது.

தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் ‘அழையா மழை’ என்ற பாடல் தமிழ், தெலுங்கும், ஹிந்தி மொழிகளில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷாருக்கான் தமிழில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “இது என் புதிய  பேஷாரம் ரங் பாடல் தமிழில் அழையா மழை என்ற பெயரில். இப்ப பாருங்கள்! ஜனவரி 25, 2023 அன்று உங்களுக்கு அருகிலுள்ள பெரிய திரையில் மட்டுமே பதான் படத்தை கொண்டாடுங்கள். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அட்லி ஹாருக்கானை வைத்து எடுக்கும் ஜவான் படமும் இந்தி மற்றும் தமிழில் வெளியாவதால் பதான் படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

SCROLL FOR NEXT