செய்திகள்

பனையூரில் ரசிகர்களை மீண்டும் சந்தித்த நடிகர் விஜய்!

சென்னை பனையூரில் ரசிகர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்து வருகிறார்.

DIN

சென்னை பனையூரில் ரசிகர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரிசு வெளியாகவுள்ள நிலையில், விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை சென்னை புறநகர் பகுதியில் உள்ள பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்தார். அதில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.

இரண்டாவது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.

இவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

ரசிகர்களை சந்திக்க கருப்பு நிற உடையில், புதிய ஹேர்ஸ்டைலுடன் வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தம்புது காலை... ஹெலி ஷா!

புதிய உச்சத்தில் முட்டை விலை!

மம்மூட்டியின் களம்காவல் பட வெளியீடு ஒத்திவைப்பு!

தங்க மீன்... சுனிதா கோகோய்!

பட வரி எழுதுங்கள்... பூமி பெட்னெகர்!

SCROLL FOR NEXT